கர்நாடக மக்களுக்கு முதல்வர் அழைப்பு

பெங்களூரு/ தாவணகெரே, மார்ச் 17- கர்நாடக மாநிலத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். மக்களுக்கு செய்துள்ள வளர்ச்சி பணிகள் அடிப்படையில் மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
என முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு பணிகள் துவக்கம் மற்றும் பயனாளிகளுக்கு நல உதவிகள் விநியோகம் ஆகியவற்றை துவக்கி துவக்கி வைத்து வழங்கிய பிறகு முதல்வர் கூறும் போது
வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, சிறுசேதமடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு, பயிர் நாசத்துக்கு ரூ.3000 கோடி இழப்பீடு என ஒரே மாதத்தில் வழங்கியது மத்திய மாநில அரசுகளின் இரட்டை இயந்திர சாதனை அரசு என்றார்
ரைதா வித்யாநிதி யோஜனா 13 லட்சம் குழந்தைகளை சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் ஆயுள் காப்பீட்டிற்காக 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட யஷஸ்வினி யோஜனா இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் யோஜனா மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் யோஜனா ஆகியவற்றின் கீழ் பெண் குழந்தைகளுக்கான சுயதொழில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.