கர்நாடக மாநிலத்தில் ஓரளவு குறைந்த அரிசி விலை

rice

பெங்களூர், ஏப்ரல் 2-விண்ணை தொடும் அரிசி விலை சற்று குறைந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக ஓட்டல், பிற நோக்கங்கங்களுக்காக பயன் படுத்தி வந்தவர்களுக்கு சில நிவாரணங்கள் கிடைத்துள்ளது.
இருப்பினும் ,இது தற்காலிக விலை குறைவு தான். அண்டை மாநிலங்களில் இந்த புதிய நெற்பயிர் வந்துள்ளது. மேலும் பாரத் அரிசி தாக்கமும் விலை குறைவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
அனைத்திற்கும் மேலாக அரிசி இருப்பு குறித்த தகவல்களை விற்பனையாளர்கள் வாரந்தோறும் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதனால் அடுத்த என்ன சட்ட தடைகள் வருமோ என்ற அச்சத்தில் பெரும்பாலான விற்பனையாளர்கள் இருப்பு வைப்பது வில்லை
மேலும் ஒரே நேரத்தில் அதிக அளவில் அரிசி சந்தைக்கு வருவதால் அரிசி முக்கியமாக ஸ்ட்ரீம் அரிசி என்ற நீராவி அரிசி கிலோவுக்கு எட்டு ரூபாய் குறைந்துள்ளது.
எஸ்வந்த்பூர் ஏ பி எம் சி உணவு தானிய வியாபாரிகள் சங்க செயலாளர் சாய்ராம் கூறுகையில், ஏ பி எம் சி மொத்த சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆர்.என்.ஆர். ஸ்ட்ரீம் அரிசி கிலோ 56.58 ரூபாய். தற்போது அதன் விலை 48.49 ரூபாய்.
அதே போல் சோனா ஸ்ட்ரீம் அரிசி ஒரு கிலோ 56 ரூபாயாக இருந்தது. அது தற்போது 47 ரூபாயாக குறைந்துள்ளது.கர்நாடகாவில் ராய்ச்சூர்,கங்காவதி, சிரகுப்பா, பெல்லாரி, சித்திரதுர்கா, தாவணகெரே ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் நெல் வந்துள்ளது. இதற்கிடையில் அரிசி விலை அதிகமாக இருக்கும்போது, சில்லறை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர்.
அப்படிப்பட்டவர்கள் பழைய விலைக்கு விற்கிறார்கள். ஆனால் நீராவி அரிசி எட்டு முதல் பத்து ரூபாய்க்காக குறைந்துள்ளது. ஆயினும் பச்சை அரிசி விலையில் எந்த மாற்றமும் இல்லை விலை வீழ்ச்சிக்கான காரணம் :

  • ஆந்திர மாநிலம், தெலுங்கு தேசம், மாநிலங்களில் இருந்து அரிசி வந்துள்ளது.
  • கர்நாடகாவில் அரிசி உற்பத்தி அதிகம்.
  • சந்தையிலும் பாரத் அரிசி கிடைக்கிறது.
  • அரிசி இருப்பு மீது மத்திய அரசு கண்காணிப்பு நடத்துகிறது.
    இந்த வறட்சியின் போது அரிசி ஆலைகளுக்கு அரிசி கிடைக்கவில்லை என்றால், அவை கதவுகளை மூட வேண்டி இருந்தது.
    இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ஆந்திரா மற்றும் தமிழகத்திலிருந்து அரிசி வந்துள்ளது .இதனால் விலை குறைந்தது‌ 4, 5 மாதங்களுக்கு பின் நீராவி அரிசி அதிகரித்துள்ளதால்,நீராவி அரிசியின் விலை கிலோவுக்கு 8 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
    இருப்பினும் பச்சை அரிசியின் விலை பழையபடியே இருக்கிறது. இதனால் அதன் விலை குறைய வில்லை என்கிறார் துப்கூரில் உள்ளஎஸ்.எல்.என். ரைஸ் இண்டஸ்ட்ரியல் உரிமையாளர் படேல் பாபு.