கர்நாடக மாநிலத்தில் கனமழை

பெங்களூர், நவ 20-
கர்நாடக தென் மாவட்டங்களில் நவம்பர் 24ம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சிக்மகளூர், குடகு மாவட்ட பகுதிகள் உட்பட, 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் கணித்து, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தென் கன்னடா, வடக்கில் பாகல்கோட், பெல்காம், தார்வாட், கதக் , ஹாவேரி கொப்பல், ராய்ச்சூர், விஜயபூர், ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 24க்கு பிறகு கனமழை பெய்யும்.
தெற்கு மாவட்டங்களில் பெங்களூர் ரூரல், பெங்களூர் நகரம், சாம்ராஜ்நகர், சிக்க பல்லாபூர், குடகு, கோலார், ராம் நகர், மைசூர், ஷிமோகா, விஜயநகர் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22 முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் மழை பெய்யும் .
விஜபூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
நவம்பர் 21க்கு பிறகு பெங்களூர் மழை பெய்யும். உப்பினங்காடி, சிருங்கேரி, சக்லேஷ்பூர், ஆகிய நகரங்களிலும் மழை பெய்துள்ளது.
எச்.ஏ.எல். பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 29 .2 செல்சியஸ் பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இது தவிர பெங்களூர் நகரில் அதிகபட்ச வெப்பநிலை 30.0 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 19.1 டிகிரி செல்சியஸ் பதிவானது.தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலம், அந்தமான் நிக்கோபார், ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கு கன மழை பெய்யும். அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் ,திரிபுரா, ஆகிய மாநிலங்களில் பனிமூட்டமான வானிலை இருக்கும். அங்கு அதிகபட்சம் 28 .9 செல்சியஸ் டிகிரி வெப்பநிலையும் குறைந்தபட்ச வெப்பநிலை 12.6 டிகிரி செல்சியசும் பதிவாகி இருந்தது.