
டெல்லி, நவ. 21-கர்நாடகம் மாநிலம் உட்பட பல மாவட்டங் களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து ள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் பெரும் பாலான இடங்களில் மக்கள் குளிர் காலத்திற்கு காத்திருக்கின்றனர்.
இருப்பினும், டெல்லி உட்பட பல மாநிலங்களில் வெப்பநிலை குறைய தொடங்கியுள்ளது.டெல்லியில் குளிர் அதிகரிப்பதாக வானிலை ஆய்வுப்படி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் குறையும்.
அதன் பின் சிறிது குளிர் இருக்கும். வானிலை ஆய்வு கூற்றுப்படி, பாகிஸ்தானில் தற்போது மேற்கத்திய இடையூறு தீவிரமாக உள்ளது. இது மெதுவாக கிழக்கு நோக்கி நகர்கிறது. கிழக்கு நோக்கி நகர்ந்து வட மேற்கு இந்தியாவின் சமவெளிகளில் காற்று வீசுகிறது. இதன் காரணமாக ஓரிரு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் இருந்து குறைய வாய்ப்பு உள்ளது. ஸ்கைமெட் வானிலை அறிக்கையில் காற்று லேசான மேற்கத்திய இடையூறு மலைகளுக்குள் நுழையக் கூடும். இதன் விளைவாக உயரமான பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக வட மேற்கு இந்தியாவின் சமவெளி பகுதிகளில் குளிர் அதிகரிக்கும்.
ஸ்கைமெட் கருத்துப்படி அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை குறையும். இது குளிரை அதிகரிக்க கூடும். டெல்லி ,
நவம்பர் 21 க்கு பின் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் வானத்தில் மேகங்களின் இயக்கத்தை காணலாம்.
,கேரளாவின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
மற்றும் சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். தெற்க கர்நாடகம், ராயலசீமா மற்றும் லட்சத்தீவுகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
வடகிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம் அதிகரிப்பதால், நவம்பர் 21க்கு பிறகு டில்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் காற்றின தரம் குறியீடு மேம்படும்.