
பெங்களூரு, நவ. 6: தட்சிண கன்னடா மாவட்டம் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் நவ.10 வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி, சூள்யா, புத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டரை மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலா, சார்முடி, குருவாயனகெரே, படங்காடி உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பெய்தது. பண்ட்வாளை, புத்தூர், சூள்யாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
நவம்பர் 10-ம் தேதி வரை மழை நீடிக்கும் என மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை குறைந்துள்ள நிலையில் கோடையின் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பருவமழை சற்று நிம்மதியை அளித்துள்ளது.
பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் நல்ல மழை பெய்யும். மாநில மக்களுக்கும் மழையின் தேவை உள்ளது. இந்த நிலையில் மழை பெய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.