கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் கன மழை

பெங்களூர் ஜூன் 3-
பீதர் மாவட்டத்தில் மழை பேரிடர் உருவாகி முதல் மழைக்கு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. ஹூனசூர் தாலுகா
ஸ்ரீமாலி கிராமத்தில் பலர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதில் துளசிராமன் பாண்டுரங்கா ஆகியோர் வீடுகளுக்கும் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
பால்கி ஹுளத்தூர், பசவ கல்யான், முழுவதும் நேற்று மதியம் பெய்த கனமழையால் வாய்க்கால்களை சுத்தம் செய்யாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ஹுளத்தூர் தாலுகா முழுவதும் இடி காற்றுடன் கனமழை பெய்து வருவதால், காற்றுடன் கூடிய கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற மக்கள் தினறினர்.
பெங்களூர் வெளி மண்டலத்திற்கு உட்பட்ட ஆனேக்கல் தாலுக்கா முழுவதும் இன்று அதிகாலையில் கன மழை பெய்தது. நேற்று இரவு பெய்த இடியுடன் கூடிய மழையால் ஆனேக்கல் சந்தாப்பூர், ஹெப்ப கோடி, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சிதறி ஓடினர்.
நேற்று மாலையும் ஆனேக்கல் தாலுகாவில் மழை பெய்தது. கனமழையால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மறுபுறம் ராம் நகரா மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. சென்னப்பட்டினாவில் கனமழை பெய்து வருகிறது.
இங்கு கிராமபுறங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துடன் கனகாப்புரா, மாகடி, உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.கனமழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலை ஆறு போல் மாறியதுஇதனால் நேற்று இரவு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அட்டா காவிரியில் ஆடுகள் மழை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹாவேரி தாலுகா, பாரதி கிராமத்தில் மழையால் வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் ஆடு மாடுகள் மகிழ்ச்சியுடன் நடமாடின. இதை பார்த்து செம்மறி ஆடுகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தன.