கர்நாடக மாநிலத்தில் மேலும் 8 நாள் கனமழை

பெங்களூர் அக் 4-
கர்நாடக மாநிலத்தில் மேலும் எட்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்டோபர் 10ம் தேதி வரை சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சில இடங்களில் மஞ்சள் எச்சரிக்கையும், எச்சில் வெளியிட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை தாக்கும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
வட கன்னடா தென் கன்னடா, பெல்காம், சிக்மகளூர் ,பாகல்கோட் குடகு ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் மூன்றில் கனமழை பெய்ய துவங்கியது.
அக்டோபர் 10ம் தேதி வரை பெங்களூர் நகரம், கிராம சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ளிட்ட இடங்களிலும் வட கர்நாடக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
வங்காள விரிகுடா, அரபிக் கடலில் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கனமழை பெய்யும் என தெரியவந்துள்ளது.
இம்மாதம் தொடர்ந்து மழை பெய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் தெரிவித்துள்ளனர்.