கர்நாடக மாநிலத்தில் 13ம் தேதி வரை கனமழை

பெங்களூர், டிச.7-
பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 13ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் மழை தற்போது இடைவெளி விடப்பட்டிருந்தாலும், மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அல்லது மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
பெங்களூர் ரூரல் சாம்ராஜ் நகர் ,சிக்பல்லாபூர், கோலார், மைசூர் ,மண்டியா, பெல்லாரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். அதே போல தாவணக்கெரே, ஷிமோகா, தும்கூர், விஜயநகர், சிக்மகளூர், ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யும். கடலின் அலைகள் அதிகளவு கொந்தளிக்கவும் வாய்ப்புள்ளது.
கதக், ஹாவேரி, பெல்காம், விஜயபூர், தார்வாட், ஹூப்ளி, ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் டிசம்பர் 13 ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்யுமென சில மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.