கர்நாடக மாநிலத்தில் 22ம் தேதி வரை கனமழை

பெங்களூர், நவ. 18-
நவம்பர் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூர் உட்பட மாநில முழுவதும் நவம்பர் 22 ம் தேதி வரை பலமான மழை ஐந்து நாட்களுக்கும் பெய்யும் . பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
தற்போது சிலிக்கான் சிட்டியில் நல்ல மழை பெய்து வருகிறது.
பெல்காம், தார்வாட், கதக், சாம்ராஜ் நகர், ராம்நகர் ,தும்கூர், மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தென் கன்னடா, உடுப்பி, ராய்ச்சூர், சிக்கபல்லாபூர், கொப்பல், கதக் ,மைசூர், விஜயநகர், ஷிவமோகா, கோலார், குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களிலும் கூட நல்ல மழை பெய்யும். என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குளிர்கால நிலையையும் பொருட்படுத்தாமல், இன்று முதல் ஐந்து நாட்கள் மழை பெய்யும். மாவட்ட நிர்வாகங்கள் இதற்காக உஷார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நவம்பர் மாதம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்காக பொதுமக்களும் கூட நல்ல மழைக்காக பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.