கர்நாடக மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

பெங்களூர்,மே.30-: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்தது போல் கர்நாடக மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை கூட்டம் நடைபெறும் என்று
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.
ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் இந்த ஆலோசனை முகாம் நடைபெறும் என்றும், அக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதற்காக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில்
முகாமில் 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள்.
500 பேரை ஆறு பகுதிகளாகப் பிரிப்போம். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னணி அணியினர் பங்கேற்கின்றனர். கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த முகாமில் ஆலோசிக்கப்படும் இவ்வாறு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகமார் கூறினார்