கர்நாடக மாநில கீதம் 2 நிமிடம் 30 வினாடி

பெங்களூர்: செப்டம்பர் . 23 – தேசிய கவிஞர் குவெம்பு எழுதியுள்ள மாநில கீதத்திற்கு அரசு நேரமிதியை உறுதிப்படுத்தியிருப்பதன் வாயிலாக இது குறித்து இருந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைத்துள்ளது. தேசிய கவிஞர் குவெம்பு எழுதியுள்ள மாநில கீதம் ‘ ஜெய பாரத ஜனணீய தனுஜாதே ‘ என்ற பாடலுக்கு தற்போது மாநில அரசு கால நியதியை அறிவித்துள்ளது. சங்கீத விதூஷினி எஸ் ஆர் லீலாவதி தலைமையிலான குழு சிபாரிசு செய்துள்ள நிலையில் மைசூர் அனந்தஸ்வாமி இசை அமைப்பில் இனி மாநில கீதத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் பாடப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை ட்வீட் செய்துள்ளார். மாநில கீதத்தின் வரிகள் மற்றும் கால நேரம் குறித்து முடிவு செய்யும் விஷயமாக முடிவு தெரிவித்துள்ள முதல்வருக்கு நன்றிகள் . மாநில கீதத்தின் ஒரு வார்த்தையையும் விட்டு விடாமல் இன்னும் சிறப்பாக பாட முடியும். என அமைச்சர் அணில் குமார் ட்வீட் செய்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்தே மாநில கீதத்தின் வரிகள் மற்றும் நேரத்தை உறுதி செய்யும் விஷயம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த வகையில் மாநில கீதத்தின் வரிகள் மற்றும் கால நேரம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்தது . தற்போது இவை இரண்டிற்கும் முதல்வர் முடிவு செய்து அறிவித்துள்ளார்.