கர்நாடக முதல்வருக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஜூன். 16
காவிரி மேலாண்மை வாரியத்தில், மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். மேலும் மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என சொல்லும் கர்நாடகாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு உரிமையில்லை என்ற கர்நாடக முதல்-மந்திரியின் கூற்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.