கர்நாடக முதல்வருக்கு ஜே.பி. நட்டா அறிவுறுத்தல்

பெங்களூர் : ஜூன். 18 – மத்திய திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ளுங்கள் என பி ஜே பி தேசிய தலைவர் ஜெ பி நட்டா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் தெரிவித்துள்ளார்.பி ஜே பி தேசிய தலைவர் ஜெ பி நட்டா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை உணவு கூட்டம் நடத்தி தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தினர். அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல மாநிலங்களில் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இது விஷயமாக மாநிலத்தில் உள்ள நிலைமை குறித்து நட்டா தகவல்களை கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலத்தில் நிதானமாக போராட்டங்கள் துவங்கிவரும் நிலையில் தீவிர எச்சரிக்கை வகிக்கப்படவேண்டும் . தவிர மத்திய திட்டங்களுக்கு எதிராக எவ்வித போராட்டங்களும் நடக்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும். அமைதியைக்காப்பாற்றும் நோக்கில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நட்டா ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது. எலஹங்காவில் உள்ள ராம்தா ரிசார்ட்டில் பி ஜே பி கட்சியின் ஓ பி சி பிரிவு கூட்டத்தின் நிறைவு விழாவில் பி ஜே பி தேசிய தலைவர் ஜெ பி நட்டா கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பி ஜே பி மாநில தலைவர் நளீன் குமார் பாட்டீல் உட்பட மாநில கட்சி பிரமுகர்களிடம் நளீம் குமார் பேசினார். இது தேர்தல் வருடமாயிருப்பதால் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசாத வகையில் முன்னெச்சரிக்கை வகிக்க வேண்டும். அரசு மற்றும் கட்சிக்கு இடையில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த கூட்டத்தின் போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எவ்வித அலையோசனைகளும் நடத்தப்படவியலை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இந்த கூட்டத்திற்கு பின்னர் நட்டாவுடன் முதல்வர் பசவராஜ் பொம்மையும் ஹெலிகாப்டரில் சித்ரதுர்காவிற்கு சென்றார். இந்த விமான பயணத்தில் அமைச்சரவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.