கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி

பெங்களூர் ஜூலை 9
முதல்வர் நிவாரண நிதிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து ரூ.5 கோடி நன்கொடை வழங்கப்பட்டது
இதற்கான காசோலையை வனத்துறை அமைச்சர் ஈஸ்வர பி க‌ண்ட‌ரே முதல்வரிடம் வழங்கினார்
காற்று மாசுவால் ஏற்படும் புற்றுநோய், ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக கோளாறுகள் மற்றும் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு உதவ கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதற்காக 1974 ஆம் ஆண்டு நீர் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 37(2)ன் கீழ் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்த நன்கொடை அளிக்கப்பட்டது.
இதற்கான காசோலையை வனம், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஈஸ்வர பி கண்ட்ரே, முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜமீர் அகமது கான், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, வனம், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை துணைத் தலைமைச் செயலர் மஞ்சுநாத் பிரசாத், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் பி.பி. ரவி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் பாலச்சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.