கர்நாடக முதல்வர் மாற்றமில்லை

பெங்களூர், ஜூன் 10- கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மாற்றப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது முதல்வரை மாற்ற கட்சியிலுள்ள எதிர் கோஷ்டியினர் தீவிர முயற்சி செய்து வந்தனர் இந்த நிலையில் கட்சி மேலிடம் கூறினால் நான் பதவி விலக தயார் என்று எடியூரப்பா பரபரப்பு பேட்டி அளித்து இருந்தார் ஒருபக்கம் இவரை முதல்வர் நாற்காலியில் இருந்து அகற்றும் பணியில் எதிர் கோஷ்டியினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் முதல்வரின் ஆதரவு எம்எல்ஏக்கள் கையெழுத்து வேட்டை நடத்தி வந்தனர் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிஜேபி மேலிடம் முடிவு செய்தது இதை அழித்து மேலிட பொறுப்பாளர் அருண் சிங் என்று பெங்களூர் வந்தார் இருதரப்பினரையும் அழைத்து ஆலோசனை நடத்தி சுமுக தீர்வு காண இருப்பதாக கூறப்பட்டது இந்த நிலையில் மேலிட பொறுப்பாளர் அருள் செய்யும் என்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவருக்கு கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது முதலமைச்சர் எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.