கர்நாடக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வரலாறு காணாத வெயில்

கார்வார், ஏப்.6- வட கர்நாடகாவின் சமவெளி மாவட்டங்களை போலவே மேற்கு தொடர்ச்சி மலைகளும் வெயிலால் வாடி வருகின்றன.
வனவிலங்குகளும் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. குஜராத்தில் இருந்து தமிழகம் வரை பரவியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இம்முறை மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டி உள்ளது.
மலைபாங்கான பகுதிகளில் குழாய் கிணறுகள் பழுதடைவது அதிகம். ஏரிகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது.
இதனால் மக்களிடையே கவலை ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியை இப்படி ஆகிவிட்டால் எப்படி செல்வது என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.பருவமழை காலத்தில் மேலை நாடுகளில் மழை இல்லாததால் கடல் வெப்பம் அதிகமாக இருந்தது.
இப்போது சூரியன் பெரும்பாலும் கடற்கரை மற்றும் மலைகளை சுடுகிறது. வனவிலங்குகளும் தண்ணீர் பிரச்சனை உள்ளது 80 சதவீத வனப்பகுதி அமைந்துள்ள உத்திரகன்னடாவின் எல்லாப்பூர், சிரசி மற்றும் சித்தாப்பூர் பகுதிகளில் போர்வெல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகள் பெரும்பாலும் வட கன்னடா, ஷிமோகா, சிக்கமகளூர், குடகு, உடுப்பி, தென் கன்னடா மாவட்டங்கள் வழியாகவும் கர்நாடகாவின், ஹாசன் சாம்ராஜ்நகர் பெல்காம் வழியாகவும் செல்கின்றன.
கர்நாடக இயற்கை பேரிடர் மேலாண்மை மையத்தின் தகவலின்படி இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. கார்வார் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. தொடர்ச்சி மலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் ஈரப்பதம் அதிக அளவு உள்ளது.கேரளா மற்றும் கர்நாடகாவின் இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் உண்மையான வெப்பநிலையை விட வெப்பம் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் கடலோர காவல்துறையினருக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது .உத்தர கன்னடா 40. 2 சிமோகா 40.4 ஹாசன் 39. 1 சிக்மகளூர் 40 .6
குடகு 37 உடுப்பி 38
தென் கனடா 38.9 மேலும் 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அங்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் கோடை நாட்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரிலும் வெப்பநிலை அதிகபட்சமாக உயரக்கூடும்.
37 டிகிரி செல்சியஸ் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு துறை மூத்த விஞ்ஞானி பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.