கர்ப்பப்பை வாய் புற்றுநோயிக்கு தடுப்பூசி- இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

புதுடெல்லி, செப்டம்பர் : 1 இந்தியாவில் பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிக்கான தடுப்பூசி இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் கர்ப்பப்பை வாயில் தொற்று ஏற்படும்போதே கண்டுபிடித்துவிட்டால் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்க முன்கூட்டியே தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிந்த நிலையில், ஜூன் 8 ஆம் தேதி அன்று தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பரிசோதனைகள் வெற்றியடைந்த நிலையில், மத்திய உயிரி தொழில்நுட்ப துறையும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்கிறது.