கர்ப்பிணி பெண் தற்கொலைகணவன் மாமியார் மாமனார் கைது

பெங்களூர் : நவம்பர். 3 – ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் ஐஸ்வர்யா என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக கோவிந்தராஜநகர் போலீசார் ஐஸ்வர்யாவின் கணவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து வழக்கை முன்னடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யாவின் கணவன் ராஜேஷ் , மாமனார் கிரியப்பா , மாமியார் சீதா , மச்சினன் விஜய் மற்றும் அவனுடைய மனைவி தஸ்மின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் ஐஸ்வர்யா தற்கொலைக்கு பின்னர் கோவா மற்றும் மும்பையில் பார்ட்டி நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ராஜேஷை குடும்பத்தாரின் ஒப்புதலுடன் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டுள்ளாள். ஐஸ்வர்யா யு எஸ் ஏவில் பட்டம் படித்தவராக இருந்துள்ளார். கணவன் ராஜேஷ் டைரி ரிச் நிறுவன உரிமையாளராயிருந்துள்ளார். ராஜேஷ் நிறுவனத்தில் ஐஸ்வர்யாவின் தந்தை சுப்பிரமணி தங்கையின் கணவன் ரவீந்திரா கணக்கராக பணியாற்றிவந்துள்ளார் . இவரே முன்னின்று ஐஸ்வர்யா மற்றும் ராஜேஷ் திருமணத்தை நடத்திவைத்துள்ளார். ஆனால் சொத்து விவகாரமாக ரவீந்திரா மற்றும் சுப்பிரமணி குடுபத்தாறுக்கிடையில் தகராறு இருந்ததால் தந்தை மேலிருந்த பகையால் மகள் குடும்பத்தில் உறவினர்கள் குழப்பங்களை உருவாக்கியுள்ளனர். ரவீந்திரா குடும்பத்தார் ஐஸ்வர்யாவின் சரித்திரத்தை தோண்டி எடுத்து கணவன் ராஜேஷ் குடும்பத்தாருக்கு தேவையில்லாத கட்டுக்கதைகளை தெரிவித்து வந்துள்ளனர். தவிர மருமகள் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களை அனுப்பி இவள் சரியானவள் இல்லை. என ஐஸ்வர்யா குறித்து பலவகைகளில் விகாரமாக தெரிவித்துள்ளனர் . இதை தொடர்ந்து ராஜேஷ் குடும்பத்தார் ஐஸ்வர்யாவை அடிக்கடி துன்புறுத்த துவங்கியுள்ளனர் . ஐஸ்வர்யாவின் மாமனார் கிரியப்பா , மாமியார் சீதா , மற்றும் மச்சினன் விஜய் மற்றும் அவனுடைய மனைவி தஸ்மின் ஆகியோர் சேர்ந்து ஐஸ்வர்யாவை வரதட்சணை கொண்டுவருமாறு துன்புறுத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது . இவர்கள் எவ்வளவு துன்புறுத்தியும் ஐஸ்வர்யா கணவன் ராஜேஷுக்காக மொவனம் காத்துவந்துள்ளாள் . தான் சம்பாதித்த பணத்தில் கணவனுக்கு ஆடம்பர சூப்பர் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க நகைகள் வாங்கி கொடுத்துள்ளாள் . ஆனாள் குடும்பத்தாரின் பேச்சை கேட்டு கணவன் ராஜேஷ் ஐஸ்வர்யாவை திட்ட துவங்கியுள்ளான் . இதனால் மனம் நொந்த ஐஸ்வர்யா 20 நாட்களுக்கு முன்னர் தாய் வீட்டுக்கு சென்றாள் . தவிர அக்டோபர் 29 அன்று மனவேதனையில் மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொன்டுள்ளாள் . இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாய் ராஜேஷ் மற்றும் அவனுடைய குடும்பத்தாருக்கு எதிராக கோவிந்தராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தவிர தங்கள் மகளின் குடும்பத்தை கலைக்க உடந்தையாக இருந்த ரவீந்திரா , கீதா , ஷாலினி மற்றும் ஓம்பிரகாஷ் ஆகியோருக்கு எதிராகவும் ஐஸ்வர்யாவின் தாய் புகார் அளித்துள்ளார்.