கற்பழிப்பு முயற்சியில் இளம் பெண்ணை கொன்ற காமுகன் கைது

பெங்களூர் : ஆகஸ்ட் . 12 – மஹதேவபுராவின் லக்ஷ்மிசாகர் லே அவுட்டில் உள்ள வீட்டின் எதிரிலேயே இளம் பெண் ஒருவர் பிணமாக கண்டெடுத்துள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களை வொயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்துள்ளனர். இளம்பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த காமுகன் செக்யூரிட்டி ஒரிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணாசந்த் சேட்டி என்பவன் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருப்பதுடன் இளம் பெண்ணை கொலை செய்த காமுகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டி சி பி எஸ் கிரீஷ் தெரிவித்துள்ளார் . ஷெல் பெட்ரோல் வங்கியில் பணியாற்றிவந்த குல்பர்கா மாவட்டத்தைசேர்ந்த மஹாநந்தா (21) கடநத 10ம் தேதியன்று இரவு காணாமல் போயிருந்தாள் . இது குறித்து அவளுடைய அக்கா போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் வீட்டின் எதிரிலேயே இளம் பெண் பிணமாக கண்டெடுக்கப்பட்டுளாள் . இது குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மஹதேவபுரா போலீசார் பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது இறந்த பெண்ணின் பாதத்தில் தூள் இல்லாதது கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர். இரவு காணாமல் போன இளம் பெண்ணின் கால்களில் எவ்வித தூளும் இல்லாததால் அவள் வெளியே எங்கும் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இறந்த பெண்ணின் அக்கம் பக்கத்து வீடருகிலேயே கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நோக்கில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கொலையுண்ட மஹாநந்தா பக்கத்து வீட்டிலேயே இருந்த கிருஷ்ணா சந்த் வீடு அருகில் சென்றிருந்ததை பார்த்ததாக சிறுமி ஒருவள் போலீசாருக்கு தெரிவித்துள்ளாள் . இது தவிர இறந்த பெண்ணின் உடல் கிடைத்து பல மணி நேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்த கிருஷ்ணாசந்தை போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரணை நடத்தியபோது இளம் பெண்ணை அவனே கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒரிசாவை சேர்ந்த கிருஷ்ணாசந்த் நகரில் டெக் பூங்கா ஒன்றில் செக்யூரிட்டியாக பணியாற்றிவந்துள்ளான். ஆகஸ்ட் 10 அன்று இரவு சமையல் அறையில் சாப்பாடு செய்ய பாத்திரத்தை வைத்திருந்த மஹானந்தா வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளாள் . அப்போது அவள் கிருஷ்ணாசந்த் வீட்டருகில் வந்த போது அவளை தன்னுடைய வீட்டிற்குள் இழுத்துக்கொண்டுள்ளான். பின்னர் அவளை கற்பழிக்க முயற்சித்து பலவந்தமாக முத்தமிடவும் முயற்சித்துள்ளான். என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இளம் பெண் இதை தவிர்க்க முயற்சித்துள்ள நிலையில் கூக்குரல் இடவும் துவங்க இதனால் பயமடைந்த குற்றவாளி இளம் பெண்ணின் பின் பக்கமிருந்து அவளுடைய மூக்கு மற்றும் வாயை அடைத்து மற்றொரு கையால் அவளுடைய கழுத்தை நெறுக்கியுள்ளான். தான் அலறி துடிக்கவும் வாய்ப்பில்லாத நிலையில் மூச்சு முட்டி மஹாநந்தா இறந்துபோயுள்ளாள். அவள் இறந்த பின்னர் அவளுடைய உடலை வீட்டிலேயே படுக்கை விரிப்பால் சுற்றி ட்ரம்மில் வைத்திருந்துள்ளான். பின்னர் நேற்று அதிகாலை நேரத்தில் அவளுடைய வீட்டின் எதிரிலேயே வீசி எறிந்துள்ளான். இத்தனை நடந்த பின்னரும் ஏதும் அறியாததுபோல் நாடகமாடி காலை அங்கேயே இருந்துள்ளான். இப்போது மஹதேவபுரா போலீசார் குற்றவாளி க்ரிஷ்ணசாந்த்தை கைது செய்திருப்பதுடன் இவனுடைய குற்றத்திற்கு அவனுடைய மனைவியும் துணை புரிந்திருப்பதாக சந்தேகிக்கின்றனர்.