
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜூன் 10- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு நடந்து வரும் சம்பவங்களால் கோபம் அடைந்த அதிபர் டிரம்ப், கலிபோர்னியா ஆளுநர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் என யாரையும் கேட்காமல், தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி உள்ளார். அதேபோல் கோபத்தில் கலிபோர்னியா கவர்னரை கைது செய்ய பரிந்துரைப்பேன் என்றொல்லாம் பேசினார். இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்தன. பலரும் டிரம்புக்கு எதிராக பேரணியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வன்முறை வெடித்தது. பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், முன்பு சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.