கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்ட பொதுமக்கள்

திருவண்ணாமலை, ஜன.13-
கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைேதாறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்ப்பதற்காக அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமையன்று வைக்கப்படும் மனு பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தனர். அவர்களை அலுவலக நுழைவு வாயில் முன்பு போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை செலுத்தினர்.
அப்போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாலே நடவடிக்கை இல்லை. இது போன்று பெட்டியில் போட ெசான்னால் நாங்கள் என்ன செய்வோம். பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் பலர் புலம்பிய படியே சென்றனர்.
அதேபோல் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளிலும் பொதுமக்கள் மனு போட்டனர்.