கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை

சென்னை, ஆகஸ்ட். 2 – தமிழ் திரைத்துறையில் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இவரது சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் சென்னை தி.நகரில் உள்ளது. இந்நிலையில், தி.நகரில் உள்ள சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய சென்னை, மதுரையில் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.