கல்லால் அடித்தே சிறுத்தையைப் பிடித்த கிராம மக்கள்

தாவணகெரே ஏப். 2: மக்காச்சோள வயலில் அமர்ந்திருந்த சிறுத்தையை கிராம மக்கள் கற்களால் தாக்கி பிடித்தனர். இதனால் கவலையடைந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலி தாலுகா, கோட்டே மல்லூர் கிராமத்தில், பயமுறுத்தி வந்த‌ சிறுத்தையை, கிராம மக்கள் பிடித்துள்ளனர். கடந்த மூன்று நான்கு நாட்களாக கோட்டே மல்லூர் கிராமத்தில் சிறுத்தை ஒன்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையால் நால்வர் தாக்கப்பட்டனர்.
இதனால் கிராம மக்கள் கவலையடைந்தனர். வனத்துறை அதிகாரிகளை நம்பினால் சிறுத்தை பிடிபடாது என எண்ணி கையில் கட்டைகளை பிடித்து சிறுத்தையை தேடி வந்தனர். மக்காச்சோள வயலில் சிறுத்தைப்புலி அமர்ந்திருந்து சிறுத்தை அவர்களை பார்த்து தப்பி ஓடத் தொடங்கியது. இதனையடுத்து சிறுத்தை கற்களால் தாக்கி உள்ளனர். பின்னர் சிறுத்தையை பிடித்து அதன் காலை கட்டிய கிராம மக்கள், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தன‌ர்.