கல்லூரிக்கு வர அஞ்சும் மாணவர்கள்

பெங்களூர், நவ.21- கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அவர்களுக்கு கூறுவன அச்சம் இன்னும் தீரவில்லை போன்று தெரிகிறது.
கர்நாடக மாநிலம் முழுவதிலும் கல்லூரிகள் இறுதி ஆண்டு பட்டப் படிப்புக்கான வகுப்புகள் திறக்கப்பட்டது ஆயினும் மாணவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே வந்துள்ளனர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் சுகாதாரம் நடவடிக்கைகள் எடுத்தும் கூட மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இம்மாதம் 17ஆம் தேதி முதல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் மாணவர்களுக்கு கல்வி கற்று தர கல்லூரி திறக்கப்பட்டது ஆயினும் கூட மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர தயக்கம் காட்டியுள்ளனர் கல்லூரிகளில் 20% மாணவர்கள் கூட கல்லூரிக்கு வரவில்லை.
மாணவர்கள் பலரும் ஆன்லைன் மூலமே கல்வி கற்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு ஆஜராகும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் மாணவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே கல்லூரியில் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே மாணவர்கள் கல்லூரி கல்லூரிக்கு வருவதற்கு தொடர்ந்து அச்சத்தில் இருப்பதால் மாணவர்கள் எண்ணிக்கை வகுப்புகளில் நான்கைந்து பேர் மட்டுமே இருக்கின்றனர்.