கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட்-மாணவர் தற்கொலை

பெங்களூரு, டிச.29-
கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனமுடைந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் நாகராபாவி விநாயக் லேஅவுட்டில் நேற்று இரவு நடந்தது.
பன்னர்கட்டா ஏஎம்சி கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வந்த நிகில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
நிகில் சுரேஷ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவருடன் தகராறு செய்துள்ளார் இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம். இவரை சஸ்பெண்ட் செய்து உள்ளது. நிகில் தனது தாயுடன் கல்லூரிக்கு சென்று மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார் ஆனால் மீண்டும் கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படவில்லை.
இது தவிர, கல்லூரி ஊழியர்கள் இவரைதாக்கி கல்லூரியை விட்டு வெளியேற்றியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பன்னர்கட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று இரவு நிகில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டார். இவர் பன்னர்கட்டா ஏஎம்சி கல்லூரியில் ஒன்றரை லட்சம் கட்டணம் செலுத்தி முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வந்தார். தற்போது நிகில் சுரேஷின் பெற்றோர் கல்லூரி முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.