கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி

மேல்மருவத்தூர், மார்ச் 12: – திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று(மார்ச் 12) காலை பேருந்தும் சரக்கு லாரி உரசியதில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
மேல்மருவத்தூர் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஒரு மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த 4 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.