கல்லூரி மாணவர் தற்கொலை

பெங்களூர் : ஜனவரி. 31 – நகரின் பிரசித்தி பெற்ற பி இ எஸ் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் எலக்ட்டானிக் சிடியில் உள்ள கல்லூரியின் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்லூரி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்ததில் படு காயங்களடைந்த முதலாண்டு பி பி ஏ மாணவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தும் அவன் சிகிச்சை பலனின்றி இருந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். . இது குறித்து பரப்பன அக்ரஹார போலீசார் செயற்கை மரண வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவரின் தற்கொலைக்கு காரணம் இன்னும் தெரியவரவில்லை. இது குறித்தது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்ற்கு முன்னரும் 20 வயதான மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்தான். ஜூலை 2023ல் கிரிநகர் போலீஸ் சரகத்தில் உள்ள ஹோசகெரேஹல்லி பகுதியில் உள்ள கல்லூரி கட்டிடத்திலிருந்து 19 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்டதும் இங்கு நினைவு கூற தக்கது.