பெங்களூர் : நவம்பர். 11 – நகரின் சர்ஜாபுராவில் உள்ள அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பி எஸ் சி இறுதியாண்டு படித்துவந்த மாணவன் ஒருவன் கட்டிடத்தின் 16 வது மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ள துயர் சம்பவம் நேற்று நடந்துள்ளது . ஹைதெராபாத்தை சேர்ந்த இந்திய ராணுவ ஓய்வு பெற் ற அதிகாரி மனோகர் நம்பியார் என்பவரின் மகனான எம் அஸ்வின் நம்பியார் (21)என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த மானவராவார் . சர்ஜாபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள ஹாஸ்டலில் நேற்று காலை 7.30 மணியிருந்து 8 மணிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவன் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இவன் எவ்வித மரண வாக்குமூல கடிதமும் எழுதிவைக்க வில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலையா அல்லது இவனுடைய சாவுக்கு வேறு ஏதாகிலும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த மாணவனின் உடல் அத்திபேளேவில் உள்ள ஆக்ஸ்போர்ட் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இவனுடைய மரணம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் இப்போது ஹைதராபாதிலிருந்து புறப்பட்டுளோம். மாலை 7 மணிக்கு பெங்களூர் வந்தடைந்தோம் . அஸ்வின் என் இரண்டு மகன்களில் ஒருவன். என் மகன் சிறந்த படிப்பாளியில்லை . இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசாருடன் தொடர்பு கொண்ட பின்னரே எங்கள் மகனின் சாவுக்கான காரணம் தெரிய வரும் தவிர எங்கள் மகனின் உடல் சாவு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதாக இறந்து போன அஸ்வினின் தந்தை மனோஹர் தெரிவித்தார். இதே வேளையில் அஸ்வின் மரணம் குறித்து அவனுடைய நண்பர்கள் சமூக வலைதளங்களில் தகவலை பகிர்ந்து வரும் நிலையில் இவர்கள் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தபடி உள்ளனர். இதே போல் அஸ்வின் படித்து வந்த அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகமும் அஸ்வின் சாவிற்ற்கு அனுதாபம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலை கழக வளாகத்தில் மாணவனின் சாவு உண்மையில் துரதிர்ஷ்டவசமானது எனவும் இதனால் நாங்கள் அனைவரும் பெரும் துயரத்தில் இருப்பதாகவும் இறந்து போன மாணவனின் குடும்பத்தாருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .