கல்வி அமைச்சர் நாகேஷ் வீடு முற்றுகை

பெங்களூரு, ஜூன்.1 – திருத்தப்பட்ட பாடநூல் குழு தலைவர் ரோஹித், ராஷ்டிரகவி குவேம்புவை அவமானப்படுத்திவிட்டார் என்று கூறி என்எஸ்யுஐ தலைவர் கீர்த்திகணேஷ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமைச்சர் நாகேஷ் வீடு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.


10 நிமிடம் நாகேஷ் தனது வீட்டின் முன் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலகட்ட முயற்சிக்குப் பிறகு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.