கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

ஆந்திரா: பிப். 27:
விசாகப்பட்டினம் கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜாதிவாகா என்ற இடத்தில் ஆகாஷ் பைஜூஸ் நிர்வாகத்தின் ஜே.ஈ.ஈ, நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தப்படும் பயிற்சி நிலையமானது செயல்பட்டு வருகிறது. இன்று காலை திடீரென தீ விபத்தும் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தீயானது மளமள வென அடுத்ததடுத்த மாடியில் பரவியதால் தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் வருவதற்கு முன்பே இந்த தீ விபத்து நடைபெற்றதன் காரணமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் பொருட்சேதம் அதிகளவில் இருப்பதாகவும் முழுமையாக தீயை கட்டுப்படுத்திய பிறகே சேதத்தின் விவரம் தெரிய வரும் என்றும் இந்த தீ விபத்து ஏசி மூலமாக பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுவதும் அணைத்த பிறகு எவ்வளவு பாதிப்புகள் போன்ற விவரங்களை தெரிவிப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.