கல்வெட்டு கண்டெடுப்பு

மங்களூரு: ஜனவரி. 24 – உடுப்பி மாவட்டம் பன்னஞ்சே அருகே மூடனிடம்பூர் கிராமத்தில் சனீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள நிலத்தில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியை சேர்ந்த சிலர், அங்கு குழி தோண்டியபோது கல்வெட்டு ஒன்று தென்பட்டது. இதுகுறித்து அவர்கள், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். அந்த கல்வெட்டு 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் இருந்தது. அப்போது அது விஜயநகர பேரரசு கால கல்வெட்டு என்பது தெரியவந்தது.