களை கட்டியது கர்நாடக தேர்தல்

பெங்களூர்: ஜனவரி. 4 –
கர்நாடக சட்டசபை தேர்தல் களை கட்டியது. கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைக்க பிஜேபி தீவிரமாக களம் இறங்கி உள்ளது பிஜேபி தலைவர் ஜே பி நட்டடா நாளை கர்நாடகம் வருகிறார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்ய மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவக்குமார் டெல்லி செல்கிறார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்திற்கு விஜயம் செய்து தேர்தல் பணிக்கு ஊக்கம் அளித்துள்ள நிலையில் பி ஜே பி தேசிய தலைவர் ஜெ பி நட்டா இரண்டு நாட்கள் மாநிலத்திற்கு விஜயம் செய்ய இருப்பதுடன் கட்சியின் கூட்டங்களில் பங்கு கொள்ள இருப்பதுடன் பல்வேறு மடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார். நட்டாவின் தற்போதைய மாநில விஜயத்தால் பி ஜே பியின் தேர்தல் நடவடிக்கைகள் மேலும் சுறுசுறுப்பாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் தான் மாநிலத்திற்கு வருகை தந்து பழைய மைசூர் பகுதியில் கட்சியின் வெற்றிக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதுடன் ஆதி சஞ்சனகிரி மடத்திற்கும் சென்று வந்தார். இப்போது ஜெ பி நட்டாவும் அமித் ஷா பாணியில் கட்சி கூட்டங்கள் , மாநாடுகள் , முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைகள் , ஆகியவற்றுடன் பல்வேறு மத மடங்களுக்கும் செல்ல உள்ளார்.

நாளை முதல் இரண்டு நாட்கள் மத்திய கர்நாடகா பகுதிகளில் கட்சியின் மாநாடுகளில் பங்கு கொண்டு தேர்தல் பணிகளை முடக்கிவிட உள்ளார். நாளை டெல்லியிலிருந்து பெங்களூருக்கு வரும் நட்டா தும்கூர் மற்றும் மதுகிரியில் நடக்கும் ஷக்தி மைய பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் சித்தகங்கா மடத்திற்கு செல்ல உள்ளார். மாலை சித்ரதுர்காவில் நாழி நடக்க உள்ள பி ஜே பி பட்டியலின பிரிவு தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சித்ரதுர்காவின் மாதாரா சமுதாய மடத்திற்கு சென்று பின்னர் சிரிகெரே தரளபாலு மடத்திற்கும் செல்ல உள்ளார். ஜனவரி ஐந்து அன்று இரவு தாவணகெரேவில் தங்கும் நட்டா அன்று இரவு தாவணகெரே பகுதி எம் பிக்கள் , எம் எல் ஏக்கள் , மாவட்ட தலைவர்கள் , மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் கூட்டம் நடத்தி தேர்தல் தயாரிப்பு , வெற்றி பெற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் , குறித்து ஆலோசனைகள் நடத்த உள்ளார். ஜனவரி ஆறு அன்று காலை ஹரிஹராவில் உள்ள பஞ்சமசாலி மேடம் , பெல்லுடியில் உள்ள கனககுரு மேடம் , ராஜனஹள்ளியில் உள்ள வாலமீகி குருபீடம் , ஆகியவற்றிற்கு விஜயம் செய்து பின்னர் தாவணகெரே தெற்கு தொகுதி வாக்கு சாவடி விஜய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் அன்று மாலை துமகூருவின் சிராவில் நடக்க உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பசவராஜ் பொம்மை , மாநில பி ஜே பி பொறுப்பாளர் அருண் சிங்க் ஆகியோர் பங்கு கொள்ள உள்ள நிலையில் அருண் சிங்க் இன்று மாலையே நகருக்கு வர உள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14 ல் வெளியிட ஏற்பாடுகள் நடந்துள்ளது.
அந்தப் பட்டியலுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி. கே .சிவகுமார் புதன் கிழமை (இன்று) டெல்லிக்கு செல்கிறார். மேலிட தலைவர்கள் ராகுல் காந்தி உட்பட பலரையும் சந்தித்து பேசி முடிவு எடுக்க உள்ளார்.
இன்று துருவக்கரேயில் நடக்கும் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் டெல்லி செல்கிறார். டெல்லியில் ராகுல் காந்தி, கே. சி .வேணுகோபால், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரணதீப் சிங் சுர்ஜி வாலா ஆகியோரை சந்திக்கிறார்.
இவர்களை தனித்தனியாக சந்திக்கிறாரா, அல்லது ஒரே இடத்தில் சந்திக்கிறாரா என்ற விவரம் தெரியவில்லை. ஜனவரி 6ம் தேதி பெங்களூர் அரண்மனை மைதானத்தில்
காங்கிரஸ் மாநாடு நடக்கிறது இதில் பிரியங்கா காந்தி வர இருந்தார். ஆனால் அதே நாளில் வேறொரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜனவரி 8ம் தேதி சித்ர துர்காவில் காங்கிரஸின் எஸ்.சி .எஸ்.டி. ஐக்கிய மாநாடு நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க அழைக்கவும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.