பெங்களூர் : அக்டோபர் .17 – வீட்டு நிர்வாகம் தன் கைக்கே வரவேண்டும் என்ற துராசையில் மாமியாரை தன்னுடைய கள்ள காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மருமகள் மற்றும் மேலும் இரண்டு குற்றவாளிகளை பியாடரஹள்ளி போலீசார் கைது செய்துள்ளார். கடந்த அக்டோபர் ஐந்து அன்று மாமியார் லக்ஷ்மம்மா (55) என்பவரை கொலை செய்த மருமகள் ரஷ்மி அவளுடைய காதலன் அக்ஷய் மற்றும் அவனுடைய நண்பன் புருஷோத்தம ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் . என நகர போலீஸ் ஆணையர் பி தயானந்த் தெரிவித்தார் . லக்ஷ்மம்மாவின் மகன் மஞ்சுநாதத்தை திருமணம் செய்துகொண்டிருந்த ரஷ்மி தன்னுடைய வீட்டில் மேல்பகுதியில் வாடகைக்கு இருந்த அக்ஷய் என்பவனுடன் தகாத உறவு வைத்திருந்தாள் . வீட்டின் பண விஷயத்திற்கு லக்ஷ்மம்மா மற்றும் ரஷ்மிக்கிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது . இந்த சண்டைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்மி தானே வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டும் என்ற ஆசையில் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டினாள் . அதற்கு தன் காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்ய முடிவு செய்தாள் . கடந்த ஐந்தாம் தேதியன்று கணவன் மஞ்சுநாத் வெளியே சென்றிருந்தபோது அக்ஷய் மற்றும் அவனுடைய நண்பன் புருஷோத்தம உடன் சேர்ந்து மாமியாரை கொலை செய்துள்ளனர். முதலில் மாமியாருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்த ரஷ்மி பின்னர் தன் காதலன் அக்ஷய் மற்றும் புருஷோத்தமுடன் சேர்ந்து மூச்சடைக்க வைத்து கொலை செய்துள்ளனர் . பின்னர் மாமியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளனர் . ஆனால் இவர்களின் செயல்கள் ஒரு மொபைல் உரையாடலில் இருந்து தெரிய வந்துள்ளது . அதே கட்டிடத்தின் முதல் மாடியில் வசித்து வந்த ராகவேந்திரா என்பவர் வாயிலாக இந்த கொலை விவகாரம் தெரிய வந்துள்ளது . அக்ஷய்யின் போனை சோதனை செய்த ராகவேந்திரா அக்ஷய் மற்றும் ரஷ்மிக்கிடையே நடந்த உரையாடல்கள் விஷயம் தெரியவந்துள்ளது . இது குறித்து ராகவேந்திரா மஞ்சுநாத்திடம் தெரிவித்துள்ளார் . பின்னர் இவர்கள் உரையாடல்களை தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். பின்னர் indha உரையாடல் சாட்சியுடன் பயடரஹள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர் . பின்னர் புகாரை பதிவு செய்து konda போலீசார் ரஷ்மி மற்றும் அக்ஷியுடன் விசாரணை நடத்தி மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.