கள்ளக்காதலனை அடித்து கொன்ற கணவன் கைது

பெங்களூர் : ஆகஸ்ட். 18 – கள்ள தொடர்பு சம்மந்தமாக ஆத்திரமடைந்த தன் மனைவியின் காதலன் சிமெண்ட் மேஸ்திரியை தடியால் அடித்து கொலை செய்துள்ள கணவனை பன்னேர்கட்டா போலீசார் கைது செய்துள்ளனர். பன்னேர்கட்டா பிரதான வீதியில் உள்ள வீவர்ஸ் காலனியில் வசித்து வந்த திலீப் (27) என்பவர் கொலையுண்டவர். இவரை கொலை செய்த ராயச்சூரை சேர்ந்த ஹொன்னப்பா என்பவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியாவார். கைது செய்யப்பட்டுள்ள ஹொன்னப்பாவின் மனைவி ரேணுகாவுடன் பேகிஹள்ளி லே அவுட் ஒன்றில் திலீப்புடன் காரை வேலை செய்துவந்துள்ளார். இதற்கிடையில் ரேணுகா திலீப்பின் காதல் வலையில் சிக்கியுள்ளார். அடிக்கடி வேலை செய்துவரும்போது வேண்டுமென்றே அவளுடைய கணவனை வேறு இடங்களில் வேலை செய்ய அனுப்பிவிட்டு ரேணுகாவை தன்னிடம் பணியாற்றும் வகையில் திலீப் செயல்பட்டுவந்துள்ளார். அதன்படி வேறு இடத்தில் வேலைக்கு சென்றிந்த கணவன் ஹொன்னப்பா தண்ணீர் குடிக்கும் சாக்கில் மனைவி வேலை செய்யும் இடத்திற்கு வந்தபோது தன்னுடைய மனைவி மற்றும் மேஸ்திரி அங்கு இருக்கவில்லை. ஆனால் இவர்களை தேடிய ஹொன்னப்பா கட்டிடத்தில் மொட்டை மாடியில் இவர்கள் இருவரையும் கண்கூடாக பார்த்துவிட்டான். ஏற்கெனவே இது குறித்து ஆத்திரத்தில் இருந்த ஹொன்னப்பா திலீப்பை தடியால் பலமுறை தாக்கி உதைத்துள்ளான். இந்த தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்து துடித்துக்கொண்டிருந்த திலீப்பை அருகில் இருந்தவர்கள் 112 எண்ணுக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திலீப் இருந்துள்ளான். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பன்னேர்கட்டா போலீசார் ஹொன்னப்பாவை கைது செய்துள்ளனர். எஸ் பி மல்லிகார்ஜுனா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதே போல் மற்றொரு சம்பவத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றவேண்டும் என்ற கனவு கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தன் கனவு நிறைவேறாத நிலையில் மனம் நொந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெலகாவி மாவட்டத்தின் நிப்பானி தாலூகாவின் ஹஞ்சினாளா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. அப்ராசோ ஷிவாஜி பனாஜி (24) என்பவன் தற்கொலை செய்துகொண்டுள்ள இளைஞன் ஆவான். இந்த இளைஞன் நேற்று வீட்டில் தற்கொலை செய்துகொண்டிருப்பதுடன் இந்த விவகாரம் தாமதமாக தெரியவந்துள்ளது. பலமுறை ஷிவாஜி பனாஜி ராணுவத்தில் சேரும் ஆசையில் தேர்வுகள் எழுதியிருப்பினும் தான் தேர்வு செய்யபடாததால் இளைஞன் மனம் நொந்து கடந்த இரண்டு வருடங்களாக மஹாராஷ்டிராவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளான். ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளுக்கான தேர்வுகளை பலமுறை எழுதியும் தன்னுடைய முயற்சிகள் கடைசி வரை பலனளிக்காத நிலையில் இந்த மன வேதனையில் கடைசியில் தற்கொலை செய்துகொண்டுள்ளான் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.