கள்ளச்சந்தையில் ரெமிடிசிவிர் முதல்வர் எச்சரிக்கை


பெங்களூர், மே 4: கர்நாடக மாநிலத்தில் கள்ளச்சந்தையில் ரெமிடிசிவிர் விற்பனை ஆவதாக தகவல்கள் வந்துள்ளது. இதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்தார். கர்நாடகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை படுக்கைகள் பற்றாக்குறை ரெமிடிசிவிர் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் இவை அனைத்தும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும்
அதிகாரிகளுடன் தமது அதிகார பூர்வமான இல்லமா காவேரியில் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று மாநிலத்தில் பரவலாக உள்ளது. இது மிகவும் கடினமான சூழ்நிலை. அவ்வாறான நிலையில் மத்திய அரசு எங்களுடன் நிற்கிறது. இந்த சூழ்நிலையில் சில அதிகாரிகள் கடமையை மறந்து செயல்படுவதாகவும் இதன் காரணமாக ரெமிடிசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பனையாகும் தகவல்கள் வந்துள்ளன. இதை நான் விசாரிப்பேன். விசாரித்தால், உண்மை வெளிவரும். இது ஒரு எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும். மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்