கள்ளத் தொடர்புஇளைஞர் குத்தி கொலை

பெங்களூர் : மே. 25 – பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்த இளைஞன் ஒருவனை துரத்தி துரத்தி ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் தேவனஹள்ளி தாலூகாவின் சிங்கிரஹள்ளி என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. ப்ரதீப் (27) என்பவன் கொலையுண்ட இளைஞன். இவன் பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்துள்ளான். இந்த விஷயம் அவளுடைய கணவனுக்கு தெரிய வந்து கலாட்டா நடந்துள்ளது. பின்னர் இந்த விஷயமாக போலீஸ் நிலையத்தில் சென்று சமரச பஞ்சாயத்தும் நடந்திருந்தது. புத்திமதி சொல்லிய பின்னரும் இவர்கள் தங்கள் கள்ள உறவை தொடர்ந்துள்ளனர். இந்த கோபத்தால் இப்போது ப்ரதீப் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .இரவு ப்ரதீப்பை பேச்சு வார்த்தைக்கு என அழைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளன. பெண்ணின் கணவன் வெங்கடேஷ் மற்றும் கோழி நாகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ப்ரதீப்பை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட ப்ரதீப் ஒரு கிலோ மீட்டர் வரை ஓடி சென்றுள்ளான். ஆனாலும் அவனை விடாமல் துரத்தி குத்தி கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஸ்வநாதபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.