கள்ள காதல் விவகாரத்தில் இளைஞன் கொலை :2 பேர் கைது

பெங்களூர்: ஆகஸ்ட். 6 – உறவினராயிருந்த இளைஞன் ஒருவனை மட்டை மற்றும் விக்கெட்டுகளால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தின் பாகேபள்ளி தாலூகாவின் அதிகானஹள்ளி அருகில் நடந்துள்ளது. அதிகானஹள்ளியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (38) என்பவன் கொலையுண்டவன். இவனை கொலை செய்து விட்டு தப்பியோடியிருந்த உறவினர்களான நவீன் மற்றும் வெங்கடராமு ஆகிய இரண்டு பேரை பாகேபள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அதிகானஹள்ளியின் ஸ்ரீனிவாஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிராமத்தின் புற்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த பாகேபள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஸ்ரீநிவாஸை அவனுடைய சகோதரர் உறவு கொண்ட நவீன் மற்றும் ஸ்ரீனிவாசன் அக்கா மகன் வெங்கடராமு ஆகிய இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர். இறந்துபோன ஸ்ரீனிவாசின் தாய் கங்கம்மா பாகேபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தன் மருமகளுக்கு கள்ள தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். என் மகன் ஸ்ரீனிவாஸ் தன் மனைவி அஷ்வினி மீது சந்தேகப்பட்டு அவளுடன் தொடர்பில் இருந்த நவீனை திட்டி புத்திமதி கூறியுள்ளான். அதுவே என் மகன் ஸ்ரீனிவாசன் கொலைக்கு காரணமாயிருக்கும் எனவும் ஸ்ரீனிவாசன் தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.