கள்ள நோட்டு 4 பேர் கைது

பெங்களூர் : ஜனவரி. 25 – மாநிலங்களுக்கிடையேயான கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்ய பட்டுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தின் சரண் சிங்க் மற்றும் ரஜபுத்ர ரஜனி உட்பட நான்கு குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆந்திர மாநிலத்திலிருந்து 500 ரூபாய் முக மதிப்பு கொண்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து நகருக்கு கொண்டு வந்து புழக்கத்தில் விட முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடந்த ஜனவரி 19 அன்று மதியம் 2 மணியளவில் பணத்தை விநோயோகிக்க உத்தரஹள்ளி பூர்ணப்ராங்க்யா லே அவுட்டில் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டனர். அன்று இரண்டு பேரை போலீசார் தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.போலீசார் சரண் சிங்க் மற்றும் ரஜனி ஆகியோரிடம் இருந்த 40 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து மேலும் இந்த விவாகரத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய கடப்பா மாவட்டத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டபோது அங்கு மேலும் இரண்டு குற்றவாளிகள் இருப்பதை கண்டு பிடித்து அவ்ர்களையும் கைது செய்து நகருக்கு கொண்டுவந்துள்ளனர்.