
ஹாவேரி : ஜூலை. 28 – இளைஞன் ஒருவனை கொடூரமாக தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு உடலை வீசியெறிந்துள்ள சம்பவம் இந்த மாவட்டத்தின் சோமனகட்டே என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கதக் மாவட்டத்தின் நவீன் ராத்தோட் (26) கொலையுண்டவர் . நவீன் பல வருடங்களாக விஜயநகர மாவட்டத்தின் ஹூவினடகளியில் சின்னம்மாவின் வீட்டில் வசித்து வந்துள்ளான். நவீன் பெரியவனாக வளர்ந்த நிலையில் சில தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். தவிர நவீனுக்கு எதிராக சில திருட்டு புகார்களும் பதிவாகியுள்ளன. நவீனை திருத்த குடும்பத்தார் எவ்வளவோ முயற்சித்தும் அவன் தன்னை திருத்திக்கொள்ளவில்லை வீட்டில் தனி அறையில் வசித்து வந்த நவீன் வீட்டுக்கு எப்போது வருவான் , எங்கு செல்கிறான் என்ற விஷயங்கள் யாருக்கும் தெரிந்திருக்க வில்லை. ஆனால் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற நவீனை யாரோ அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் நவீனின் இறந்த உடல் சோமணக்கட்டே கிராமத்தின் அருகில் உள்ள ஹாவேரி -குத்தலா வீதி ஓரத்தில் வீசி எரிந்துள்ளனர் .