கவர்னர் திடீர் டெல்லி பயணம்

சென்னை: ஜூன் 13
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். வருகிற புதன் கிழமை அவர் சென்னை திரும்ப உள்ளார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் கவர்னரின் செயல்பாடுகளை விமர்சித்து அவ்வப்போது டி.ஆர்.பாலு எம்.பி. பேசி வருகிறார். சென்னையில் நடந்த ஒரு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார். மதசார்பின்மைக்கு எதிராக சனாதனத்துக்கு ஆதரவாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசிவருவது சட்டமீறலாகும். கவர்னரின் பேச்சு வருத்தம் அளிப்பதாகவும் அவர் சொல்லிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அறிக்கையில் கூறி இருந்தார்.

https://www.maalaimalar.com/news/state/tamil-news-governor-rn-ravi-pays-surprise-visit-to-delhi-today-amid-political-turmoil-471831