கவர்னர் பேச்சுக்கு பிஷப் கண்டனம்

திருநெல்வேலி: மார்ச் 12- பேராயர் கால்டுவெல் டாக்டர் பட்டம் பெற்றவர் என்று, தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பிஷப் பர்னபாஸ் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அயர்லாந்து நாட்டில் பிறந்தகால்டுவெல் 1838-ல் கப்பலில் இந்தியா வந்து, தமிழ் பயின்றார். 1841-ல் திருநெல்வேலி மாவட்டம்இடையன்குடிக்கு வந்தார்.
1856-ல்இங்கிலாந்து விக்டோரியா மகாராணியிடம் கவுரவ டாக்டர்(மதிப்புறு முனைவர்) பட்டத்தை கால்டுவெல் பெற்றுள்ளார். அதேஆண்டில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டமும் பெற்றுள்ளார்.
பல மொழிகளை கற்றவர்: இந்தியாவில் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்ஆகிய மொழிகளைக் கற்றாலும், தமிழ் மொழிதான் சிறந்த மொழி என்று, மற்ற மொழிகளோடு தமிழை ஒப்பிட்டு, ஒப்பிலக்கணத்தை எழுதியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம்குறித்த புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அவரை கல்வியறிவு இல்லாதவர் என்று தமிழக ஆளுநர் கூறுவது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.