கவர்னர் விளக்கம்

கொல்கத்தா, மே 4- மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மீது ஆளுநர் மாளிகை பெண்ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக ஆளுநர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு, மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு பதிலடியாக ஆளுநர் ஆனந்த் போஸ், மாநில அரசுடன் மோதல்போக்கை கொண்டிருக்கிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கம் வந்துள்ள பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதனிடையே,
ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் ஆளுநர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.