கவாஸ்கர் கருத்து

பெங்களூர்: ஜூன் 9- 2025 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அடுத்து வெற்றி விழா நடத்த திட்டமிட்டது. ஆனால் அது துயர சம்பவமாக மாறியது. அந்த வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் தொடர் துவங்கிய சில ஆண்டுகளிலேயே கோப்பை வென்று இருந்தால், இது போன்ற ஒரு துயர சம்பவத்தை நாம் தவிர்த்திருக்கலாம் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இது பற்றி அவர் பேசியதாவது: “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் சில ஆண்டுகளிலேயே கோப்பை வென்று இருந்தால், இதுபோல அதிகப்படியான உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டு இருக்காது. இது 18 ஆண்டுகள் காத்திருந்ததால் ஏற்பட்டது. மற்ற அணிகள் கோப்பை வென்ற போது அதன் வெற்றி கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தது. ஏனெனில், அந்த ரசிகர்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.