கவிதா ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி, ஏப். 8: டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைதான தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகளும், சட்டமேலவை உறுப்பினருமான கே.கவிதாவின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் மேலும் சில‌ நாட்கள் சிறையில் இருப்பது உறுதியாகி உள்ளது. தேர்வு எழுதும் மகனை பார்த்துக் கொள்வதற்காக தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று இவர் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உள்ளது
தனது மகனின் தேர்வையொட்டி இடைக்கால ஜாமீன் கோரி கே. கவிதா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், ஜாமீன் வழங்குவதற்கு ஏற்ற உகந்த காரணமும் அல்ல, வழக்கும் அல்ல‌ என்று கூறியது. மார்ச் 15 ஆம் தேதி, அமலாக்க இயக்குநரகம் பிஆர்எஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் கே.கவிதாவை கைது செய்தது.
இந்நிலையில், தனது மகனின் தேர்வைக் கருத்தில் கொண்டு, தனது மகனைக் கவனித்துக் கொள்ள அனுமதி கோரி இடைக்கால ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஜாமீன் மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கலால் கொள்கை வழக்கில் கே.கவிதா நீதிமன்ற காவலில் உள்ளார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, “சவுத் குரூப்”-ன் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மதுபான விற்பனை உரிமங்களில் பெரும் பங்குக்கு ஈடாக ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

  • டெல்லி மதுவிலக்கு வழக்கு.
  • கைது செய்யப்பட்ட கே. கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு.
  • ஜாமீனில் வரக்கூடிய வழக்கல்ல என்று நீதிமன்றம் கூறியது.
  • மார்ச் 15 அன்று ஹைதராபாத் இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
  • தற்போது டெல்லி சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார் கே. கவிதா.