கவுன்சிலர்கள் இல்லாத மாநகராட்சியின் 3வது பட்ஜெட்

பெங்களூரு : பிப்ரவரி . 25 – பெங்களூரு மாநகராட்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல்கள் நடக்காத நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவரும் இல்லாத நிலையில் பி பி எம் பி எந்த உறுப்பினர்களுமின்றி மூன்றாவது ஆண்டாக பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் மாநகராட்சியின் பட்ஜெட் வெளியாக உள்ளது. நகரின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்களுடன் அலோசித்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர நகர வாழ் மக்களிடமிருந்தும் கருத்துக்கள் கேட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பட்ஜெட் நியமங்களுக்கு உட்பட்டே மாநகராட்சி செயல்பட்டாக வேண்டும் என்ற சட்ட நியமமும் நடைமுறையில் உள்ளது. இந்த வகையில் வருமானத்துக்கு மீறி மாநகராட்சி செலவுகள் செய்ய முடியாது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட் 10 ஆயிரம் கோடிகளுக்குள் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது . ஏனென்னில் மாநகராட்சியின் முக்கிய வரவான சொத்து வரி 3,500 கோடிக்கும் குறைவாகவே உள்ளதாக தெரிகிறது. இதே வேளையில் புலம்பெயர்ந்த பெண்களுக்கென தங்கு வசதிகள் செய்து கொடுக்கவும் இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. தவிர ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு முதியோர் இல்லங்கள் ,அமைக்கவும் இந்தாண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . இது குறித்து நிதி துறை சிறப்பு ஆணையர் ஜெயராம் ராய்ப்புரா கூறுகையில் கடந்த பட்ஜெட்டின் செயல்முறைகள் கண்டு ஆய்ந்து புதிய அறிக்கை தயாரிக்கப்படும். இந்த அறிக்கை பட்ஜெட்டின் போது வெளியிடப்படும். என்றார்.