காங்கிரசுக்கு கர்நாடக முதல்வர் சவால்

பெங்களூர், செப்.10-பாஜக தொடங்கியுள்ள ஜனஸ்பந்தன் நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் பிரசவராஜ் பொம்மை காங்கிரஸ் கட்சிக்கு சவால் விட்டார். உங்களுக்கு பலம் இருந்தால், தைரியம் இருந்தால் எங்கள் வெற்றியை தடுத்து நிறுத்துங்கள் என்று காங்கிரசுக்கு முதல்வர் பசவராஜ பொம்மை சவால் விடுத்துள்ளார்.
தொட்டபள்ளப்பூரில் இன்று நடைபெற்ற பாஜக அரசின் மூன்றாண்டு ஜனஸ்பந்த மாநாட்டை பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தாமரை மலரும் என்ற செய்தி இந்த ஜனஸ்பந்த மாநாட்டின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜகவை ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பதற்காக காங்கிரஸ் ஜனநாயக விரோத கூட்டணி ஆட்சியை அமைத்ததாக அவர் சாடினார்.அரசியல் சாசனம் பற்றி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா அப்போது எங்கே போனார்? சித்தராமையாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. கர்நாடக மாநிலம் அசைக்கப்படக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸில் இருந்து 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர் என்று ஆபரேஷன் கமலாவை முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதரித்து பேசினார் தனது பேச்சு முழுவதும் சித்தராமையாவை பொம்மை கடுமையாக சாடினார்.அன்னபாக்யா திட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டது. மணல் வியாபாரத்தை செய்து சாமானியர்களுக்கு மணல் கிடைக்காமல் தடுத்தது காங்கிரஸ் தான் என்று முதல்வர் சாடினார்.