காங்கிரசுக்கு குமாரசாமி பதிலடி

பெங்களூர்: ஜூன். 8 – ராஜ்யசபா தேர்தலிலிருந்து தன் வேட்பாளரை வாபஸ் பெரும் கேள்விக்கே இடம் இல்லை என முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பெங்களுரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி காங்கிரஸ் கட்சியினர் சொல்வதையெயெல்லாம் நாங்கள் ஒப்பு கொள்ள வேண்டுமா . நாங்கள் 32 எம் எல் ஏக்கள் உள்ளோம். காங்கிரசில் வெறும் 25 பேர் இருப்பதில் யாரிடம் அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை கூறுங்கள் . இவர்களின் மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் ஒப்புக்கொள்ள முடியுமா . எங்கள் வேட்பாளர் தேர்தல் களத்திலிருந்து எந்த விதத்தில் பின்சரிவார். நாங்கள் எந்த நிலையிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. என்னிடம் யார் சமரசத்திற்கு வந்துள்ளார்கள் என்பது குறித்து அவர்கள் கூறட்டும். நாங்கள் முதலில் வேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளோம் என சித்தராமையா கூறி வருகிறார். இவர் என்னுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளரை நிறுத்தினாரா ..அல்லது ஆதரவு கொடுங்கள் என எங்கள் கட்சி தலைவரை இவர் கேட்டிருக்கலாம் அல்லவா. அவர் சி எம் இப்ராஹிமிற்கு பழைய நண்பர் அல்லவா என குமாரசாமி கேள்வி கணைகளை விடுத்தார். எங்கள் கட்சி வேட்பாளரை தற்போது வாபஸ் பெற வையுங்கள் என்பது ஒப்புக்கொள்ளமுடியாதது. நாங்கள் என்ன இவர்களின் அடிமைகளா அவர் காங்கிரசுக்கு சென்ற பின்னர் கட்சி வேட்பாளர்கள் ஜெயிக்க எத்தனை முறை ஆதரவளித்துள்ளார் என்பதை அவரே கூறட்டும் என குமாரசாமி காட்டமாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். .