காங்கிரசுக்கு வெல்லும் தகுதியே இல்லை: ஆம்ஆத்மி

டெல்லி: பிப். 14: மம்தா பானர்ஜியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் ஒன்றும் அவ்வளவு வொர்த் இல்லை’ அந்த கட்சிக்கு டெல்லியில் ஒரு தொகுதி மட்டும் தான் கொடுக்க முடியும் என ஆம்ஆத்மி தலைவர் கறாராக தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.
அநேகமாக அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தேர்தல் நடக்கலாம். இந்நிலையில் தான் மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது. வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 400 தொகுதிகளில் வெல்லும் நோக்கத்தில் திட்டமிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 25 கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். அதேபோல் உத்தர பிரதேசத்தில் இந்தியா’ கூட்டணியில் இருந்த ஆர்எல்டி கட்சி பாஜக பக்கம் சாய்ந்துள்ளது. மேலும் இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் தனித்தே போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.