‘காங்கிரஸை உடைக்கும் ராகுல் யாத்திரை’ – சிவராஜ் சிங் சவுகான்

புதுடெல்லி, மார்ச் 19- ராகுல் காந்தி யாத்திரை குறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று போபாலில் கூறியதாவது- ராகுல் காந்தி நடத்திய யாத்திரை மும்பையில் நேற்று நிறைவடைந்தது. இது அவரது மற்றொரு தோல்வி ‘யாத்திரை’யாகும். அவர் இதுவரை 2 தேசிய அளவிலான பயணங்களை நடத்தியுள்ளார். அவர் பயணம் நடத்திய மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இல்லாவிட்டால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரஸை விட்டு விலகி வெளியேறி வேறு கட்சியில் சேர்ந்துள்ளனர். இது உண்மையில் காங்கிரஸ் கட்சி உடைப்பு, காங்கிரஸை விட்டு வெளியேறு (காங்கிரஸ் தோடோ, காங்கிரஸ் சோடோ) யாத்திரையாக மாறிவிட்டது என்றார்.