காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சோதனை

பெங்களூர் / பெல்லாரி . பிபரவரி. 10
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று ஒரே நேரத்தில் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெல்லாரி நகரின் காங்கிரஸ் எம் எல் ஏ நாரா பரத் ரெட்டி என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறையினர் 13 இடங்களில் சோதனைகள் நடத்தி உள்ளனர். பெல்லாரி நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் நாரா பரத் ரெட்டிக்கு சொந்தமான வீடு , அலுவலகம் மற்றும் அவருடைய தந்தை முன்னாள் அமைச்சர் சூர்யநாராயண ரெட்டி , சித்தப்பா மற்றும் புடா முன்னாள் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் இவர்களின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரில் இந்திராநகர் மற்றும் சென்னையில் உள்ள நாரா ரெட்டி அலுவலகத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறையின் நான்கு குழுவினர் ஒரே நேரத்தில் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு ஊழியருடன் பெங்களூரிலிருந்து பெலாரிக்கு சென்று உள்ளூர் போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சோதனைகள் நடத்தியுள்ளனர். பெங்களூரிலிருந்து வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பெல்லாரி நகரின் நேரு காலனியில் உள்ள நாரா பரத் ரெட்டிக்கு சொதமான வீடு , காந்திநகரில் உள்ள அவருடைய தந்தை முன்னாள் எம் எல் ஏ சூர்யநாராயணா என்பவரின் வீடு அலுவலகம் , மற்றும் அவருடைய சித்தப்பா பிரதாப் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தியுள்ளனர். சட்ட விரோத நிதி பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனையால் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது நாரா ரெட்டி மற்றும் அவருடைய தந்தை ஊரிலேயே இருந்த நிலையில் எம் எல் ஏவின் சித்தப்பா பிரதாப் ரெட்டி கலபுரகிக்கு சென்றிருதார். நாரா பரத் ரெட்டி குடும்பத்தார் கல் குவாரி தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் மாநிலத்தின் கொப்பலா மாவட்டத்தில் குக்கனூரு , ஆந்திரா மாநிலத்தின் ஓங்கல் ஆகிய இடங்களிலும் கல் குவாரிகளை வைத்திருந்துள்ளனர். கல் குவாரி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் காரணமாக இந்த சோதனைகள் நடந்திருப்பதுடன். நாரா பரத் ரெட்டி கடந்த சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபத்தில் தன் பிறந்த நாளில் பொது மக்களுக்கு இலவச குக்கர்களை வழங்கியுள்ளார். இந்த சோதனைகளின் போது என்னவெல்லாம் ஆதாரங்கள் சிக்கியுள்ளன என்பது குறித்து இன்னும் விவரம் தெரியவரவில்லை.